விருதுநகர் வகையறாக்கள்

திரு. காமராஜர் அவர்கள் பிறந்த ஊராக அறியப்படும் விருதுநகருக்கு வேறு சில அடையாளங்களும் உண்டு. அதில் ஒன்று தான் ‘வகையறா’ என்றும் ‘வீடு’ என்றும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘Clan’ என்று ஒரு வார்த்தை உண்டு, அதை தமிழில் குலம் என்று தோராயமாக அர்த்தம் கொள்ளலாம். குலம் தான் விருதுநகர் வட்டார வழக்க மொழியில் ‘வகையறா’ என்றானது. இந்த குல வழக்கம் உலகின் பல் வேறு நாடுகளிலும் உண்டு; பன்னெடுங்காலமாகவும் உள்ளது. மன்னர்களுக்கும் குலம் உண்டு, பழங்குடிகளுக்கும் குலம் உண்டு. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு பூர்வீகம் அல்லது அதை தோற்றுவித்த ஒருவர் இருப்பார். அவர் ஏதாவது வீர தீர செயல்கள் செய்திருப்பார், அல்லது பலருக்கும் உதவி புரிந்திருப்பார், இல்லை அவரிடம் ஏதேனும் குறைந்த பட்ச சிறப்பம்சம் ஒன்று இருந்திருக்கும். அவரின் பெயரைக்கொண்டோ அல்லது ஒரு நிகழ்வைக்கொண்டோ ஒரு குலம் உருவாகும்.

‘Patriarchy’ எனும் முறையை பின்பற்றியே குல வழக்கம் இருந்தது, அதாவது ஒரு குலத்தின் தலைவனாக ஒரு ஆண் தான் இருக்க முடியும். அதே வேளையில் பல குலங்களில் பிறந்த பெண்களை பல்வேறு காரணங்களுக்காக தெய்வமாக போற்றி வழிபடுவதும் இங்கே உண்டு. சில குலங்களின் வழித்தோன்றல்கள் வாழ்வில் பெரும் உயரங்களை அடைவர். அவரது குலத்தின் பெயரை பலர் அரியச் செய்வர். சில குலங்கள் காலப்போக்கில் ஆண் வாரிசு இல்லாமல் நின்றுவிடும். சில குலத்தின் வழிவந்தவர் நூற்றாண்டுகளைக் கடந்து காலத்துக்கேற்ப வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு தங்கள் புகழை நிலைநாட்டுவர்.

ஒவ்வொரு குலத்திற்கென்று சில பழக்க வழக்கங்களும், குணாதிசயங்களும் இருக்கும். அவை காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலையில், பல காரண காரியங்களினால் சிறிது சிறிதாக உருவாகியதும், மெருகேறியதுமாக இருக்கும். சில குலங்கள் ஒன்றோடொன்று நட்பு பாராட்டும். சில குலங்கள் நேர் எதிர் திசையில் பயணிக்கும். பெரும்பாலான குலங்களுக்கு, தனக்கென்று ஒரு ‘குல தெய்வம்’ அல்லது ‘குல சாமி’ இருக்கும். வெவ்வேறு குலங்கள் சேர்ந்து ஒரே குல தெய்வத்தை வழிபடும் முறையும் இங்கே உள்ளது. அதனால் சில குலங்கள், சில குலங்களில் மட்டுமே பெண் கொடுக்கும் மற்றும் எடுக்கும் வழக்கமும் உள்ளது.

இங்கே இன்னொரு விஷயமும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். குலம் என்பது காலம் காலமாக இருந்து வருவது. இடைக்காலத்தில் வந்தது தான் இந்த மதம், ஜாதி, மற்றும் பல. ஒரு காலத்தில், பாரத தேசத்தில் மதம் என்ற ஒன்றே கிடையாது. மேற்கிலிருந்து ‘மதம்’ என்ற ஒன்று வந்த பிறகு தான், நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை, கடைப்பிடித்த தர்மம், பின்பற்றிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு ‘இந்து மதம்’ என்று ஒரு பெயர் சூட்டப்பட்டது. செய்யும் தொழிலை வைத்து கொடுக்கப்பட்ட அடையாளம் சாதியானது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ‘சாதி’ என்பதன் அர்த்தம் வேறு. இன்றைய காலத்தில் நம் கண்ணெதிரே பார்க்கும் சாதி என்பது வேறு. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சாதிக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. சமூக மாற்றங்களும் மேற்கூறிய சாதி-மத அரிதாரங்களும் இன்று இந்த குலங்களின் மேலே பூசப்பட்டு விட்டன.

நான் அறிந்து விருதுநகரின் பல குலங்களைச் சேர்ந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர். சிலர் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்திருக்கின்றனர். அப்பெண்கள் அந்தந்த குலத்தின் மருமகள்களாகின்றனர். அவ்வளவு ஏன், சில குலங்களில் பிறந்தவர்கள் வேறு மதத்திற்கும் மாறியுள்ளனர். இருந்தும் அவர்கள் குல தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்வதும் உண்டு.

எங்கள் குலத்தின்/வகையறாவின்/வீட்டின் பெயர் ‘மதளை கருப்பன்’. புகைப்படத்தில் இருப்பது என் பாட்டனார்(நான்கு தலைமுறை முந்தையவர்) திரு. பழனிச்சாமி அவர்களும் அவரது வழித்தோன்றல்களும். Tribalpages என்ற இணையதளத்தில் எங்கள் குலத்திற்கு ஒரு குழுவும் உள்ளது. அதில் எங்கள் குலத்தை பற்றியும், குலத்தினரைப் பற்றியும் தகவல்கள் உள்ளன. குடும்ப வரைபடங்கள் மரம் மற்றும் கிளைகள் வடிவிலும் உள்ளன(Family Tree). இன்று சில மாநகரங்களில் வாழப்பவர்களுக்கு அவர்கள் மூன்று தலைமுறை முன்பு வாழ்ந்தவர்களை தெரிந்திருந்தாலே அதிசயம். விருதுநகரில் பெயருக்கு முன்னால் ஆறேழு இனிஷியல் போடும் நபர்களை சாதாரணமாகப் பார்க்கலாம். விருதுநகரில் வகையறா அல்லது வீடு என்று அழைப்பது போல சிவகாசியில் குலம் என்பது ‘கூட்டு’ என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் குடும்பத்து பெரியவர்களிடம் கேட்டுப்பாருங்கள், உங்களுக்கும் குல வழக்கமோ அல்லது இதைத் தழுவிய வேறு ஏதாவது பண்டைய மரபோ இருக்கலாம். உங்கள் மூதாதையர்களைப் பற்றி தேடித் தெரிந்துகொள்ளுங்கள். அதை உங்கள் குழந்தைகளிடம் கதைகளாகச் சொல்லுங்கள். தமிழர்களின் பல அடையாளங்கள் அழிந்து கொண்டு வருகின்றன, நம் வரலாற்றை நாம் தான் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிய நகரமான விருதுநகரில் நாம் அறிந்த சில வகையறாக்கள் இதோ. இதில் பெரும்பாலான வகையறாக்கள் சில நூறு ஆண்டுகளாக இருக்கின்றன. சில பெயர்கள் விநோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். இந்த ஒவ்வொரு வகையறாவிற்கும் பெயர்க்காரணம், வரலாறு, தனி வழிபாட்டு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையறாவிலும் சில நூறு முதல் சில ஆயிரம் வழித்தோன்றல்கள் வரை உள்ளனர். அரசியல், அரசாங்கம், கலை, இலக்கியம், கல்வி, தொழிநுட்பம், மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளிலும், பல நாடுகளிலும் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

அண்டி
அழகுமாரி
அரசன்
அம்மையப்பன்
அவரகானி
ஆண்டி
அனாலனா
ஆதி
ஆத்துகூடன்
சிவஞா
சித்தூரான்
சின்னமனூர்
சின்னையாபுரத்தான்
சொக்கநாடார்
சென்னம்பட்டியான்
தாதர்
எச்சோடி
எருதுகாரன்
எலிகொத்தனார்
ஏமன்
ஏழுஆண்பிள்ளைபெத்தவீடு
ஏலக்காய்வீடு
ஞானியார்
குருவப்ப
கிரீடம்
இடும்பன்
இடமாறி
இரும்பன்
ஐந்துவீடு
கச்சைகட்டி
கட்டாணி
கட்டையன்
கடைக்காரன்
கரிசல்காட்டான்
கருமலையான்
கருத்தான்
கத்திரிக்காய்
கனஞ்சாம்பட்டி
கட்டில்கட்டி
கட்டி
கருப்பநாடார்
கள்கிடங்குகுருசாமி
கல்லாட்டான் @ கல்லாடன்
கல்லூர்ணியா
கானாசூனா
காசிலயன்
காத்தான்
காச்சான்
காப்புளம்
காயம்பூ
காச்சக்காரன்
காயட்டு
காவடி
கீழக்கடை
கீர்த்தி
கிரட்டை
குட்டிவீடு
குலசேகரன்
குலிங்கன்
குண்டத்தூரான்
கூத்தன்
கூடைகாரர்
கூழையன்
கூரான்
கொளக்கட்டையான்
கொச்சார்
கொத்தான்
கொப்புலி
கொட்டப்பாக்கன்
கொள்காரன்
கேலயன்
கோடாங்கி
லக்ஷ்மணகொத்தனார்
மக்கினியான்
மதளைகருப்பன் @ வெற்றிலைக்காரன்
மத்தான்
மரம் வெட்டி @ மராமட்டி @ மராபட்டியான்
மணிக்கட்டி
மண்டலம்
மக்கனிலான்
மண்டையன்
மந்திகானை
மந்தமூடு
மாந்தோப்பான்
மாக்காங்கொட்டையன்
முனாஅனா
முனங்கி
முத்துராக்கு
முடங்கி
முண்டக்கண்ணன்
மூஞ்சி
மொட்டையன்
மேகவர்ணன்
மேலக்கடை
நரியண்ணன்
நாய்க்குட்டி
நாச்சி
நாட்டாமை
நாவெட்டி
நாமக்காரவீடு
நிலக்கோட்டையன்
நியாயமுடையான்
நீர்கார்த்திலிங்கம்
ஓட்டக்காரன்
ஓடைபட்டியான்
ஜவுளிசரவணன் @ கண்தின்னி @ கன்றுதின்னி
ஊத்தம்பட்டி
ஊழைகாத்தான்
பத்தாம்பிரியன்
பகளம்
பண்டிதர்
பருத்திகாரன்
பட்டைவெட்டி
பன்னீர்
பானைக்காரன்
பாவூரான்
பாவாலியன்
பாக்குமுத்தையன்
பாளையம்பட்டி
புழுதி
புலிக்குத்தி
புன்னமுத்து
பூசாரி
பூலான்
பூனைக்குட்டி
பெரியவர்
பொக்கம்பட்டியான்
பேயாண்டி
ராமகொத்தனார்
சகாதேவன்
சடுகுடுக்கா
சாமியண்ணன்
சிவந்தி
சிமினி
சிவராம்
சிசுப்பாத்தான்
சில்காத்தான்
சிவசங்கரன்
சிவனாண்டி
சிவனைந்தபெருமாள்
சீனிப்பணிக்கன்
சுக்கனியான்
சுவரொட்டி
சுண்டான்
சூத்தையன்
செம்புகட்டி
செண்டகம்
செங்குனாபுரம்
சொரண்டை
சேவுகன்
சோனையன்
தவசி
தடியன்
தப்பாண்டான்
தாயார்கானத்தான்
தில்லைகோவிந்தன்
தெனாகினா
தொத்தான்
தொந்திவீடு
தேங்கன்
தேரி
தேனூரான்
தோப்பன்
தோலாண்டி
தோட்டக்காரவீடு
உச்சன்
உத்தண்டன்
உண்டானி
உண்டேன்
உண்டையன்
வகுத்தான்
வள்ளிக்குட்டி
வனையாபட்டி
வனமூர்த்தி
வன்னியண்ணன்
வாடியான்
வாசுதேவன்
வாத்தியார்
வானக்காரமூடு
விஸ்வம்
விதைக்காரன்
வீரணன்
வெற்றிநாடார்
வெளிகண்டன்
வெள்ளப்டி
வெல்லம்
வெண்ணாத்தி
வேர்க்காரன்
வேலாமரம்
வேல்கொத்தன்
வேடரக்கன் @ வேல்ரைக்கான்

பி.கு. பெயர்கள் விடுபட்டிருந்தாலும் பிழையிருந்தாலும் சொல்லுங்கள், திருத்திக்கொள்கிறேன். இந்த விபரங்களை சேகரித்து, விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கும் என்னுடைய நன்றிகள்.

21 Comments

 1. கடைக்காரன் வகையறா விடுபட்டுள்ளது. குலதெய்வம்: மதுரை சிம்மக்கல் காமாட்சி அம்மன். விருதுநகரில் VVS கல்யாண மண்டபம் அருகிலும் கடைக்காரன் மாதா கோயில் உள்ளது.

 2. ஜவுளி சரவண நாடார் வகையறா , கன்றுதிண்ணி மற்றும் கண் திண்ணி வகையறா ஆகிய மூன்றும் ஒன்றே.

  1. கரிசல்காட்டான் வகை விடுபட்டுள்ளது.
   ஆர் எஸ் கடைக்கருகில் ( தையல் மால்) குலதெய்வம் கோவில் உள்ளது.

   1. Author

    நன்றி. கரிசல்காட்டான் வகையறாவையும் இப்பொழுது சேர்த்துள்ளேன்.

 3. Sagadevan vagaiyara
  Alagarkovil
  Pattu theru Narayanasamy kovil
  Matha kovil vadiyan theru
  Maan mark Jeya krishnanadar groups

 4. கருத்தான் வகையறா விடுபட்டுள்ளது, சிவகாசியில் பெரியாண்டவர் கோவிலும் மற்றும் அச்சம்தவிழ்த்தானில் பெரிய தாயம்மன் கோவிலும் உள்ளது. இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்று கூறுவார்கள்.

 5. Author

  நன்றி, நீங்கள் கூறியது போல பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 6. கீழ்க்கண்ட பெயர்கள் விடப்பட்டுள்ளதாய் எண்ணுகிறேன்.:-
  கச்சைகட்டி
  அனாலனா
  மக்கினியான்
  வேல்கொத்தன்
  கடைக்காரன்
  கட்டாணி
  ஊத்தம்பட்டி
  சகாதேவன்
  கருத்தான்
  வேடரக்கன் @ வேல்ரைக்கான்
  கல்லாட்டான் @ கல்லாடன்
  மரம் வெட்டி @ மராமட்டி @ மராபட்டியான்
  ஜவுளிசரவணன் @ கண்தின்னி @ கன்றுதின்னி

  1. கீழே உள்ள பெயர்கள் விடுபட்டுள்ளன என்று எண்ணுகிறேன்:-
   கச்சைகட்டி
   அனாலனா
   மக்கினியான்
   வேல்கொத்தன்

   ஊத்தம்பட்டி
   சகாதேவன்

   வேடரக்கன் @ வேல்ரைக்கான்
   கல்லாட்டான் @ கல்லாடன்
   மரம் வெட்டி @ மராமட்டி @ மராபட்டியான்

 7. ஐயா “கொட்டப்பாக்கன்” வகையறா என குறிப்பிடுவதற்கு பதிலாக “கொட்டைப்பாக்கான்” வகையறா என்று பதிவிட்டுள்ளீர்கள்

  நாங்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை பூர்வீகமாக கொண்டு தற்சமயம் சென்னை மற்றும் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவலாக வசித்து வருகிறோம்.

  எங்களின் குலதெய்வமாக சிவகாசியில் கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ “இல்லங்குடி-மாலையம்மன்” – னை வணங்கி வருகிறோம்.

  திருத்தங்கல் நாடார் கொட்டப்பாக்கன் வகையறா தாயாதிகள் என்று அறியப்படுகிறோம்.

  1. Author

   மன்னிக்கவும். தங்கள் வகையறாவின் பெயரை இப்பொழுது திருத்தியுள்ளேன்.

 8. என் தாத்தாவின் தாத்தா பெயர் மதளை கருப்ப நாடார். எங்கள் வகையறா பற்றி தேடி வருகிறேன். குல தெய்வம் சங்கிலி கருப்பசாமி

  1. Author

   மதளைகருப்பன் வகையறாவின் குலதெய்வம் திருமங்கலத்தில் உள்ள மதளை கருப்பசாமி.

 9. குலிங்கன் வகையறா விடுபட்டுள்ளது

  1. Author

   நன்றி. குலிங்கன் வகையறாவும் இப்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.

 10. வகையறா தொகுப்பிற்கு நன்றி… இதனுடன் குலதெய்வ பெயரினையும் தொகுத்து இணைக்க வேண்டுகிறேன்.
  நாங்கள் தடியன் வகையறா… ஸ்ரீ கற்கும் வேல் அய்யனார்.

 11. சிலம்பன் கூட்டம் வகையறா பெயர் விடுபட்டு உள்ளது புலியுறான் சித்தன் கோவில் மற்றும் அருப்புக்கோட்டை வாழவந்த அம்மன் குலதெய்வம் மேலும் இந்த கூட்டத்தை பற்றி யாருக்கேனும் தகவல் இருந்தால் 9843387587 இந்த எண்ணில் அழைக்கவும் 🙏🙏

 12. எங்களூடைய குலதெய்வம் முத்துமாலையம்மன் குரங்கிணி ஆனால் எங்களூடைய வகையறாவை அறிய முடியவில்லை.

 13. மந்திகூட்டம் வனகயார் விடுபட்டது

 14. எனது வீடான குலிங்கன் வீடு கட்டுரையில் விடுபடாமல் குறிப்பிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  நான் தற்சமயம் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறேன்.

  – க வெங்கடேஷ் பிரபு

 15. ஊழை காத்தான் வகையறா குலதெய்வம் எது என்று சொல்லுங்கள். 9443937038

Leave a Reply

Your email address will not be published.