1. திரு. காமராஜர் இல்லத்தை சென்று பார்க்கலாம்
2. தெப்பக்குளத்தில் மீன்களுக்கு பொரி போடலாம்
3. VCMS கேன்டீன், No 1 பால் பண்ணையில் பால்கோவா வாங்கி சுவைக்கலாம்
4. குல்லூர்ச்சந்தை நீர்த்தேக்கத்திற்கு பயணம் செய்யலாம்
5. கல்லூரிச் சாலையிலுள்ள நகராட்சி பூங்காவிற்கு குழந்தைகளுடன் செல்லலாம்
6. சின்ன மூப்பம்பட்டி மாலையம்மன் கோவில் வேப்பமரச் சாலையில் உலாவலாம்
7. அல்லா பிச்சை ஓட்டலில் பரோட்டா சாப்பிடலாம்
8. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை அறிந்துகொள்ளலாம்
9. KVS பள்ளியில் மகர நோன்பை கண்டு மகிழலாம்
10. VHNSN கல்லூரி, KVS பள்ளி, RJ மந்த்ரா பள்ளி நீச்சல் குளங்களில் நீந்தலாம்
11. அருப்புக்கோட்டை சாலை யானை தொழுவத்தில் அதை வேடிக்கை பார்க்கலாம்
12. இரயில்வே நிலையத்தில் நடைப்பயிற்சி செல்லலாம்
13. VHNSN கல்லூரி பிரமிடில் தியானம் செய்யலாம்
14. மகேஸ் பேக்கரியில் ரொட்டி, மிட்டாய் உண்ணலாம்
15. காஸ்மோபோலிடன் சங்கத்தில் டென்னிஸ் விளையாடலாம்
16. கோடையில் KVS பொருட்காட்சி செல்லலாம்
17. அரசு மருத்துவமனையை அறிந்துகொள்ளலாம்
18. பாலிடெக்னிக்கில் அல்லது ITIயில் பகுதி நேர தொழிற்கல்வி கற்கலாம்
19. அருப்புக்கோட்டை சாலை முதியோர் இல்லம் சென்று உதவலாம்
20. தவறாமல் பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கு விருதுநகர் வரவும்
21. உள்ளூர் அணியுடன் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடலாம்
22. வீடுகளில் கற்றுத்தரப்படும் கலை, கைவினை கற்கலாம்
23. சூலக்கரை விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறலாம்
24. அய்யனார் நூற்பு ஆலையில் அழகிய மீன்கள், பறவைகள் வாங்கி வளர்க்கலாம்
25. VSVN பாலிடெக்னிக்கில் கூழாங்கற்கள் மீது நடைப்பயிற்சி செய்யலாம்
26. கிணற்றில், கல் கிடங்கில் நீந்தி மகிழலாம்
27. கிருத்துவ தேவாலயங்களில் ஞாயிறன்று வழிபாடு செய்யலாம்
28. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை அறியலாம்
29. குல்லூர்ச்சந்தை நீர்த்தேக்கத்தில் பறவைகளை வேடிக்கை பார்க்கலாம்
30. புகழ்பெற்ற மீசலூர் ஜோதிடரை கலந்தாலோசிக்கலாம்
31. நந்தவனத்தில் அதிகாலை புத்துணர்வு குளியல் பெறலாம்
32. அரசு அருங்காட்சியகம் செல்லலாம்
33. அருண் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழலாம்
34. சைக்கிளில், மோட்டார் சைக்கிளில் சிறிய சந்துக்களில் சுற்றித் திரியலாம்
35. சூலக்கரை அய்யனார் கோவில் சென்று வழிபடலாம்
36. பர்மா கடையில் உண்டு மகிழலாம்
37. உங்கள் வாகனம் ஓட்டும் திறமையை காலை மெயின் பஜாரில் சோதிக்கலாம்
38. வின்ரோஸ் சங்கத்தில் கூடைப்பந்து விளையாடலாம்
39. மேம்பாலங்களில் இருந்து இரயிலை வேடிக்கை பார்க்கலாம்
40. மகளிர் காவல் நிலையங்களை அறிந்துகொள்ளலாம்
41. வெயிலுகந்தம்மன் கோவில் திருவிழாவை கண்டுகளிக்கலாம்
42. கல்வி நிலையங்களின் ஆண்டு விழாக்களில் கலந்துகொள்ளலாம்
43. மோட்டார் சைக்கிளில் மலை பிரதேசம், அருவி, கடற்கரை எங்காவது செல்லலாம்
44. இங்குள்ள சொற்ப திரை அரங்குகளில் திரைப்படம் பார்க்கலாம்
45. மூன்று நாட்கள் நடக்கும் விருதுநகர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்
46. KVS பள்ளி அருகேயுள்ள சந்தையில் மீன் வாங்கிச் சமைக்கலாம்
47. வாலசுப்ரமணியர் கோவிலில் யானையை வேடிக்கை பார்க்கலாம்
48. எண்ணை பரோட்டாவை எண்ணற்ற கடைகளில் உண்டு மகிழலாம்
49. அம்பாள் திருமண மண்டபத்தில் இலவசமாக யோகாசனம் கற்கலாம்
50. நகரில் ஒரு மாட்டுப் பண்ணைக்குச் செல்லலாம்
51. குழந்தைகளுடன் பஞ்சுப்பேட்டையில் சைக்கிளில் உலாவலாம்
52. ஞாயிறு காலை KVS காய்கறிச் சந்தை செல்லலாம்
53. சூலக்கரை காது கேளாத, பேச இயலாத குழந்தைகளுக்கான பள்ளிக்கு உதவலாம்
54. நகரில் அவ்வப்போது நடக்கும் படப்பிடிப்புகளை பார்க்கலாம்
55. ஏதாவது ஒரு தொழிற்சாலைக்கு அனுமதிபெற்று செல்லலாம்
56. வீடியோ மற்றும் கணிப்பொறி விளையாட்டு பார்லர் சென்று விளையாடலாம்
57. நகராட்சி அலுவலகங்களை அறிந்துகொள்ளலாம்
58. காமராஜர், கட்டையன் உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி செய்யலாம்
59. கௌஷிக மகாநதியில், கிணறுகளில் மீன் பிடிக்கலாம்
60. அஞ்சல் அலுவலகங்களை அறிந்துகொள்ளலாம்
61. தெப்பம் அருகே கணேசர் மார்க்கில் மசாலா சோடா குடிக்கலாம்
62. சைக்கிள் ரிக்க்ஷாவில் சிறிது தூரம் பயணம் செய்யலாம்
63. ஆசாரி பட்டறையில் அழகிய தங்க நகைகள் செய்துகொள்ளலாம்
64. ரமஜான் மாதத்தில் நோன்புக் கஞ்சி வாங்கிக் குடிக்கலாம்
65. தெப்பம் அருகே நீதிமன்ற நடவடிக்கைகளை பார்க்கலாம்
66. மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்
67. மாவட்ட நூலகம் செல்லலாம்
68. காமராஜர் மன்றத்தில் இசை, நடனம் கற்கலாம்
69. பிரதோஷ நாட்களில் கோவில் சென்று வழிபடலாம்
70. VHNSN கல்லூரி வேப்பமரச் சாலையில் புத்தகம் படிக்கலாம்
71. ஆஞ்சநேயா, அபிராமி ஓட்டலில் சைவக் காலை உணவு சாப்பிடலாம்
72. காவல் நிலையங்களும் அதன் கீழ் வரும் பகுதிகளையும் அறிந்துகொள்ளலாம்
73. திருப்புகழ் சுவாமி மடத்தில் குழந்தைகளுக்கு மந்திரிக்கலாம்
74. வார இறுதியில் மதுரைக்கு ஷாப்பிங் செல்லலாம்
75. ராஜா மீன் பண்ணையில் வண்ண மீன்கள் வாங்கலாம்
76. பழைய ராஜாமணி ஓட்டலில் உண்டு மகிழலாம்
77. சமூக நல அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றலாம்
78. தாசில்தார் அலுவலகங்களை அறிந்துகொள்ளலாம்
79. அம்பாள் திருமண மண்டபத்தில் ஏரோபிக்ஸ் கற்கலாம்
80. குடும்பத்தினரின், நண்பர்களின் குல தெய்வ வழிபாடு சென்று வழிபடலாம்
81. பொட்டலில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கலாம்
82. மண்டகப்படியில் வழிபடலாம்
83. அருப்புக்கோட்டை சாலையில் அன்பு இல்லம் சென்று உதவலாம்
84. ஓட்டுனர் பள்ளியில் பயிற்சி பெறலாம்
85. அறிவியல் மன்றத்தில் நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்கலாம்
86. தெப்பத்தில் மீன் ஏலத்தில் பங்கேற்கலாம்
87. அன்டன் பேக்கரியில் கிறிஸ்துமஸ் கேக் வாங்கி சுவைக்கலாம்
88. ஏதாவது நிகழ்ச்சிக்கு ப்ளெக்ஸ் போர்டு அடித்து வைக்கலாம்
89. பெரிய கார்த்திகையன்று தெப்பத்தில் நீந்தி மகிழலாம்
90. மேம்பாலத்தில் இருந்து கெளஷிக மகாநதியை வேடிக்கை பார்க்கலாம்
91. புடோ ரூ பள்ளியில் கராத்தே, ஸ்கேடிங் கற்கலாம்
92. மீசலூர் அருகேயுள்ள சாய் பாபா கோவில் சென்று வழிபடலாம்
93. சார்பதிவாளர் அலுவலகங்களை அறிந்துகொள்ளலாம்
94. இசையுடன் கூடிய சிற்றுந்தில் பயணம் செய்யலாம்
95. வாடியான் தெரு அருகே உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு உதவலாம்
96. தொழில் துவங்கும் வாய்ப்புகள் பற்றி அறிந்துகொள்ளலாம்
97. ஸ்டூடியோ சென்று தனியாகவோ குடும்பத்துடனோ புகைப்படம் எடுக்கலாம்
98. மசூதியில் குழந்தைகளுக்கு மந்திரிக்கலாம்
99. அய்யா வைகுண்டர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்
100. விருதுநகர் வரலாற்று புத்தகங்கள் வாங்கிப் படிக்கவும்
சில காலம் முன்பு இந்த பட்டியலை ஒரு ஃபேஸ்புக் குழுவில் ஆங்கிலத்தில் பகிர்ந்திருந்தேன். விருதுநகரில் நான் செய்த, ரசித்த சில விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். நன்றி.
புகைப்பட உதவி: அஜீத் குமார்