புதிய வாகனப் பதிவு எண்ணை தேர்வு செய்வது எப்படி?

உங்கள் கனவு வாகனத்தை வாங்கிவிட்டீர்களா? உங்கள் அடுத்த கட்ட பணி அந்த வாகனத்தை மாநில போக்குவரத்து ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியது. பதிவு செய்யும் பலரும் பதிவு எண்ணை அவர்களே தேர்வு செய்ய விரும்புவர். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை காண்போம்.

1. உங்கள் நகரம் எந்த போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ளது என்பதை இங்கே கண்டறியவும்.
2. உங்களுக்குரிய போக்குவரத்து அலுவலகத்தின் சமீபத்திய பதிவு எண் என்பதை அறியவும். இந்த சமீபத்திய எண்ணில் இருந்து 1000 எண்கள் வரையுள்ள எந்த ஒரு எண்ணையும் நீங்கள் முன்பதிவு செய்யலாம். உதாரணமாக TN01BC 9955 சமீபத்திய எண்ணாக இருந்தால் TN01BD 0955 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

tn-rto-starting-registration-number
3. வாகனத்தின் உரிமையாளர் தான் பதிவு எண் முன்பதிவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
4. தேவையான ஆவணங்கள்:

  • படிவம்-20(புதிய வாகனம் பதிவிற்கு விண்ணப்ப படிவம்)
  • படிவம்-21(வாகன உற்பத்தியாளர்/விற்பனையாளர் வழங்குவர்)
  • கோரிக்கை கடிதம்(5 ரூபாய் முத்திரைத் தாளில் எழுதவும்)
  • வாகனம் வாங்கிய ரசீது
  • முகவரி சான்று (ஆதார், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை போன்றவை)

5. செலுத்தவேண்டிய தொகை:

  • 50CC க்கு குறைந்த இரு சக்கர வாகனம் – 1000 ரூபாய்
  • 50CC க்கு அதிகமான இரு சக்கர வாகனம் – 2000 ரூபாய்
  • ரூபாய் 400000 மதிப்பிற்கு குறைந்த நான்கு சக்கர வாகனம் – 10000 ரூபாய்
  • ரூபாய் 400000 மதிப்பிற்கு அதிகமான அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் – 16000 ரூபாய்

6. விண்ணப்பிக்க வேண்டிய நபர்: வட்டார போக்குவரத்து அலுவலர்

7. விண்ணப்ப எண்ணை அலுவலரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும். உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இங்கே அறிந்துகொள்ளலாம். உதாரணம் கீழே.

tn-rto-advance-registration-status

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *