இலவச ஜியோ போன் – பதிவு செய்வது எப்படி?

06-மார்ச்-2018 அன்றைய நிலவரம்
தற்சமயம் உங்கள் வீட்டிற்கே வந்து ஜியோ போன்கள் வழங்கப்படுகின்றன. புகைப்படம், அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை. உங்கள் கை ரேகையை ஸ்கேன் செய்து, உங்கள் ஆதார் எண் போனுடன் இணைக்கப்படும்.

தொடர்புக்கு: 9524053856, 8668091194, 9884567780

ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு செல்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த போனை வாங்க நீங்கள் ரூபாய் 1500 செலுத்த வேண்டும். மூன்று வருடங்களுக்குப் பின் அந்தத் தொகை உங்களுக்குத் திரும்பி செலுத்தப்படும். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு உங்களுக்கு கிடைக்கபோவதோ ஒரு 4G போன். அதன் செல்போன் திரையின் நீளம் 2.4″, 512 RAM, 4 GB கொள்ளளவு. இந்தப் போன் ஆகஸ்ட் 24 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு இந்தப் போனை வாங்க விருப்பம் உள்ளதா? விருப்பம் உண்டு எனில், நீங்கள் செய்ய வேண்டிய முதல் செயல் ஜியோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது தான்.

பதிவு செய்ய வழிமுறைகள் இதோ:

1. ஜியோ இணையதளத்திற்கு செல்லவும்.
2. “Keep me posted” என்று எழுதியிருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும்.

reliance-jio-phone-tamil
3. நீங்கள் யாருக்காக போன் வாங்க வேண்டும்? தனி நபர் எனில் “An Individual” முன்பே உள்ள வட்டத்தை கிளிக் செய்யவும். ஒரு நிறுவனத்திற்காக எனில், “Business”.
4. தனி நபருக்கு பின்வரும் விவரங்களை டைப் செய்யவும்: பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், அஞ்சல் குறியீட்டு எண்.

reliance-jio-phone-individual-tamil
5. நிறுவனத்திற்கு பின்வரும் விவரங்களை டைப் செய்யவும்: தொடர்புகொள்பவர் பெயர், நிறுவனத்தின் பெயர், அஞ்சல் குறியீட்டு எண், பாண் அல்லது GSTN எண், தொடர்புகொள்பவர் மின்னஞ்சல் முகவரி, தொடர்புகொள்பவர் செல்போன் எண், ஜியோ போன் அல்லது ஜியோ ஃபை தேவைப்படும் எண்ணிக்கை.

reliance-jio-phone-business-tamil
6. அவர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க “I accept terms & conditions” முன்பே உள்ள சதுரத்தை கிளிக் செய்யவும்.
7. “Submit” பொத்தானை கிளிக் செய்யவும்.
8. பொத்தானை அழுத்தியவுடன் பின்வருவது போல ஒரு செய்தி காண்பிக்கப்படும்.

reliance-jio-phone-register-tamil

9. நீங்கள் பதிவு செய்ததை உறுதிப்படுத்த நீங்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

“Dear Customer,

Thank you for your interest in JioPhone India Ka smart Phone. We will keep you updated about the developments related to this phone.

Thank You,

Team Jio”

உங்களுக்கு கேள்விகள் ஏதும் இருந்தால் இந்த வலைப்பதிவிலோ முகநூல் பக்கத்திலோ கேட்கலாம். நன்றி.

பி.கு. முதல் பத்தியில் கூறிய விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *