இந்திய இரயில்வே முன்பதிவு நிலைகள் – CNF/CAN/RAC/…

பயணம் நம் பலரின் வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்ட நிலையில், இரயில் பயணம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் வசதியாக உள்ளது. ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட இரயில்வே இன்று பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. நம் பயணத்தை இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. அந்த முன்பதிவு பல நிலைகளில் இருக்கலாம், அவை என்ன என்பதை நாம் காண்போம்.

CNF CONFIRM
உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டு. இதில் பயணம் செய்வதில் எந்த ஒரு சிக்கலோ தடங்கலோ இல்லை.
CAN CANCELLED
ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டு. இதை வைத்து பயணம் செய்ய இயலாது.
RAC RESERVATION AGAINST CANCELLATION
பயணி ஒருவர் அமருவதற்கு தலா ஒரு இருக்கை மட்டும் வழங்கப்படும். ஒரு வேளை இரயிலில் வேறு காலியிடங்கள் இருந்தால், படுக்கை வழங்கப்படும்.
WL WAITLIST
நீங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளீர்கள். உதாரணமாக உங்கள் நிலை WL/3 என்று இருந்தால், உங்களுக்கு முன்பே பதிவு செய்த பயணிகள் மூவர் ரத்து செய்தால் மட்டுமே உங்கள் பயணச்சீட்டு உறுதி செய்யப்படும். இதில் சில உட்பிரிவுகள் உள்ளன.
GNWL GENERAL WAITLIST
பொது ஒதுக்கீடு(GENERAL QUOTA) வழியே நீங்கள் பதிவு செய்த பயணச்சீட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தால் அது இந்த நிலையை சேரும்.
TQWL TATKAL WAITLIST
தத்கால் ஒதுக்கீடு(TATKAL QUOTA) வழியே நீங்கள் பதிவு செய்த பயணச்சீட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தால் அது இந்த நிலையை சேரும்.
RLWL REMOTE LOCATION WAITLIST
நீங்கள் செல்லும் இரயில் வழித்தடத்தின் இடையே வரும் இரு முக்கியமான நகரங்களுக்கு நீங்கள் முன்பதிவு செய்து, அது காத்திருப்பு பட்டியலில் இருந்தால் அது இந்த நிலையை சேரும். இந்த நிலையில் இருக்கும் பயணச்சீட்டு தனியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
PQWL POOLED QUOTA WAITLIST
உங்கள் பயணம் இரயில் வழித்தடத்தின் தொடக்கத்தில் அராம்பித்து இடையில் முடிந்து விடும், அல்லது இடையே துவங்கி வழித்தடத்தில் இறுதியில் முடிந்துவிடும். அப்படி முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தால் இந்த நிலையை சேரும். நீங்கள் பயணம் செய்யும் இரயில் ஒன்றிற்கு மேற்பட்ட மண்டலங்கள்(Zone) வழியாகச் செல்லும். உங்கள் துவக்க அல்லது முடியும் இரயில் நிலையத்தின் இடையேயோ அல்லது நீங்கள் பயணிக்கும் மண்டலங்களில் யாராவது பயணச்சீட்டை ரத்து செய்தாலோ தான் உங்கள் பயணச்சீட்டு உறுதியாகும்.
RSWL ROAD-SIDE WAITLIST
உங்கள் பயணம் இரயில் வழித்தடத்தின் தொடக்கத்தில் அராம்பித்து இறுதி வரை செல்லாமல் ஏதோவொரு சிறுநகரத்தில் முடிந்து விடும். அப்படி முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு காத்திருப்பு பட்டியலில் இருந்தால் இந்த நிலையை சேரும்.
REL RELEASED
பயணத்தின் PNR எண் ரத்து செய்யப்பட்டு புதிய PNR எண் வழங்கப்படும். பயணத்தின் ஆரம்ப அல்லது முடிவு இரயில் நிலையமோ அல்லது வகையோ(3AC/2AC போன்றவை) மாற்றம் செய்திருக்கலாம்.
NR NOROOM
காத்திருப்பு பட்டியல் பரிந்துரைக்கப்பட்ட அளவு எண்களை மீறும் பொழுது இந்த நிலையை சேரும்.
NOSB NO SEAT BERTH
5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பாதி கட்டணம் செலுத்தினால் இருக்கை/படுக்கை கிடையாது.
WEBCAN Railway Counter Ticket: Passenger has been cancelled over internet and refund has not been collected
இரயில்வே அலுவலகத்தில் முன்பதிவு செய்து இணையதளத்தில் ரத்து செய்யப்பட்டு பணம் திரும்பப்பெறப்படவில்லை.
WEBCANRF Railway Counter Ticket: Passenger has been cancelled over internet and refund has been collected
இரயில்வே அலுவலகத்தில் முன்பதிவு செய்து இணையதளத்தில் ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *